மணிவண்ணன் நடராசன்

எங்கள் சகோதரன் மணிவண்ணன் நடராசன் அவர்களது 7 ஆண்டு நினைவு வணக்கம்(அம்பாள் அடியில் 19-03-2006) அழுகின்ற விழிகள் அழுதுகொண்டே இருக்க, வழிகின்ற கண்ணீர் கன்னங்களை நனைக்க, கழிகின்ற காலம் கடந்துகொண்டே நடக்க, வழி நடந்து, வழி நடந்து விதியோடி முடிக்க, அழியாத கோலமென எம்முள்ளே நீதான். தொழுகின்ற கைகள் தொழுதபடி நிற்க, மொழிகின்ற வாய் மணியான் என்றளைக்க, எழில் தோய்ந்த உருவமது எமை வந்து தழுவ, ஒழியாத துயரோடு உருள்கிறது வாழ்வு. நினைவுகளால் சுடரேற்றிக் கசிந்துருகி நிற்கின்றோம். அவரது ஆத்மா சாந்தியடைய நயினை நாகபூஷனியை தொழுது நிற்கின்றோம்....... -குடும்பத்தினர்

Similar events