நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையில் வசித்தவருமான திருமதி. கணபதிப்பிள்ளை தங்கலட்சுமி (03/12/2012) திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.
| தோற்றம் |
நயினாதீவு
-
|
|
| மறைவு |
கொழும்பு
Monday, Dec 03, 2012
|
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், தற்பொழுது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி கணபதிப்பிள்ளை அவர்கள் 03/122012 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செ.நல்லதம்பி சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (வவுனியா மெய்கண்டார் ஆதின முதல்வர் வித்துவான், இளைப்பாறிய ஆசிரியர் – யாழ்.இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன் (லண்டன்), ரஜனி (இலங்கை), சூரியகலா (ஆசிரியை பம்பலபிட்டி இந்துக்கல்லூரி), சிவகலா (கனடா), குகஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பரராஜசிங்கம், மற்றும் பரமேஸ்வரி, நவரட்ணசிங்கம், துரைராஜசிங்கம், காலஞ்சென்ற ஓங்காரலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வள்ளியம்மை, இராமலிங்கம், காலஞ்சென்ற அரும்பொருள், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சரோஜினிதேவி, காலஞ்சென்ற இலங்கைநாயகம், கிரிசாம்பாள், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற வேல்முருகன்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமாஸ்ரீ (லண்டன்), கணேஷராஜா (அதிபர் யாழ்.இந்துக்கல்லூரி), நித்தியானந்தன் (மல்கன்ஸ் - கொழும்பு), தவராஜா (கனடா), ரவிசந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
லக்சிதா, லக்சாயினி, லக்கணா, லக்சனன், திரிலோசனன், திவாகரன், லிங்கேசன், அங்கஜன், பூரணி, தர்சிகா, கிருஷ்ணி, திவானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 05-12-2012 புதன்கிழமை அன்று காலை 08:00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 03:00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.