பிரம்மஸ்ரீ சம்புகேஸ்வரக்குருக்கள் மகேஸ்வரக் குருக்கள்

Full Name: சம்புகேஸ்வரக்குருக்கள் மகேஸ்வரக் குருக்கள்
Born: 15.11.1935 ம் ஆண்டு நயினாதீவில் பிறந்தார்
Awards: "கிரியாகலாபமுத்தாமணி"
Occupation: யாழ்பாணம் ஐக்கிய வியாபாரச் சங்கத்தில் எழூதுவினைஞராக

நயினாதீவு ஜம்புகேஸ்வரக்குருக்கள் மீனாம்பாள் தம்பதியினருக்கு ஏக புத்திரராக 15/11/1935 ம் ஆண்டு நயினாதீவில் பிறந்தார். ஆரம்ப கல்வியை நயினாதீவு நாக பூசனி வித்தியாலயத்திலும் இடைநிலை கல்வியை மகாவித்தியாலயத்திலும் யா. மத்திய கல்லூரியிலும் கற்று சிரேஸ்ட தராதர பரீட்சையில் சித்தி பெற்று யாழ்பாணம் ஐக்கிய வியாபாரச் சங்கத்தில் எழூதுவினைஞராக சேவை செய்து வந்த காலை நாகபூசணி அம்மன் கோயில் வீரபத்திரர் கோயில் என்பனவற்றில் நித்திய பூசைக் கடமைகளுடன் வேதாந்த சாத்திரக் கலைகளில் விற்பன்னராகி 'கிரியாகலாபமுத்தாமணி' என்ற சிறப்பு விருதினை தமதாக்கிக் கொண்டார். பெற்றோர் விருப்பத்திற் கிணங்க மானிப்பாயை சேர்ந்த மகளான சீதாலட்சுமி அம்மாளை 1962ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு ஆண்மக்களும் ஒரு பெண் மகளும் திருவருட்பேற்றினாற் கிடைக்கப் பெற்றது. பிள்ளைகள் எல்லோரும் பட்டதாரிகளாகத் திகழ்வதும் ஒருவர் சமஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் பெற்று கிழக்குப் பல்கலைகழகத்தில் சமஸ்கிருத சிரேஸ்ட விரிவுரையாளராக சேவையாற்றுவதுடன் தற்போது புலமைப்பரிசில் கிடைத்து காசி இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பயிற்சி பெற்று வருகின்றமை பாராட்டப் பட வேண்டியது மகளார் இசையாசிரியராகவும் கலைத்துறைக்குத் தொண்டாற்றுவதும் குறிப்பிடற்பாலது.

சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்களிடமிருந்த சிறப்பான பண்பாடு நல்ல மனித நேயம் மிக்க தன்மையும் ஒழுக்கம் விழுப்பம் தவறலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். என்ற கூற்றுக்கமைய சர்வதேச இந்து மத குரு பீடாதிபதியாகத் திகழ்வதேயாகும்.மிகப் பிரபல்யமான இந்து ஆலயங்களில் கொடியேற்ற உயர் உற்சவத்தினை சிறப்பாக செய்து வருகின்றமையும் கும்பாபிசேகம் முதலிய நிகழ்வினையும் குறிப்பிடவேண்டியது அவசியமாகும். தற்போது பொன்விழாவினை பாரியாருடன் சென்று இந்தியாவில் கொண்டாடி வந்திருக்கின்றார்.