நாணிக்கோணி நலிந்து கிடந்த தமிழை
பேணிக் கனடாவில் காத்து நிற்கும் கலை
வாணி நயினைக்கவிஞன் நாக சண் மகள்
மணிவிழாக் கண்டு மனம் மகிழ்கின்றாள் இன்று
கற்றுப் பட்டம் பெற்று கலாநிதிகள் ஆவதுண்டு - தேவியவள்
பெற்றவுடன் கலாநிதியாய் ஆகும் பேறு பெற்றவளே!
வற்றாத தாய்மொழிக் காதலொடு மாறாத மண்பற்றதும் கொண்டே
மற்றவர்கள் மதிக்கும்படி மகத்தான வாழ்வு வாழ்பவளே !
சரியாக வரி செய்து சமர்ப்பிக்கவேண்டுமென
வரிசை வரிசையாய் மக்கள் கூட்டம் தேடிவரும் படி
உரிய தகமையும் உன்னத திறனும்கொண்டு பிறர்க்குதவும் குணமதில் இமயம் போல
பெரியதாய் விளங்குகின்ற குலமோகன் தன் மனையாளே!
அறிவிலும் அழகிலும் சிறந்த அபிமன்யுவொடு அருவியின் அன்பினில் திளைக்கின்ற தாயே!
பொன்விழா கடந்து வைரத்தைப் புதுப் பொலிவோடு வரவேற்று நிற்பவளே !
உன் பவள விழாவும் நூற்றாண்டும் இந்தப் பார் காண வேண்டுமென்று
அன்னையாய் ஆட்சி செய்யும் நயினைத்தாய் நாகம்மாள் அருள்தன்னை வேண்டுகிறேன்
அன்னைத் தமிழ் மொழி போல ஆண்டாண்டு வாழியவே