எண்பதாவது பிறந்தநாள் வாழ்த்து - திரு குலசிங்கம் சின்னத்தம்பி

எண்பதாவது பிறந்தநாள் வாழ்த்து - திரு குலசிங்கம் சின்னத்தம்பி

எல்லாம் வல்லவனை
எல்லோர்க்கும் நல்லவனை எம்மண் பெற்றிடவே
என்ன தவம் செய்ததென்று எண்ணிப் பெருமிதத்தைக் கொள்ளும் வேளையிலே ,
எட்டினான் எட்டுப் பத்தை எங்கள் சின்னத்தம்பியின் குட்டிக்காளை
சிங்கத்தை ஒத்த நடை சிந்திக்க வைக்கும் பேச்சு
தங்கத்தை நிகர்த்த குணம் தலைக்கனம் இல்லாப் பணம்
வங்கத்தை தாண்டியோடும் வரையறையில்லா அன்பு
பங்கத்தைப் பல்லிக்கும் நினையா நெல்லியாச்சி மகனுக்கு எண்பதாச்சா ?
பிரபலம் மிகுந்த பொறியியலாளனாய் கொழும்பினை வலம் வந்தோன்
காலையாட்டிக் கதிரையில் இருந்தே
வேலை வாய்ப்புக்கள் வழங்கி நின்றோன்
மும்மொழி யாவும் செம்மொழி போலவே முழங்கியே நின்றிடுவான்
குழிப்பந்து ஆட்டத்தில் விளையாட்டுத் திடலையே குலை நடுக்கம் கொள்ள வைப்பான்
அழியாத அன்பு கொண்ட ஆயுள் வைத்தியரை ஆருயிர் மனையாளாய்க் கொண்டிட்டான்
வழிகாட்டியாய் பலர் வாழ்க்கையில் இருந்திட்டான்
விண்ணுந்து ஓட்டுகின்ற வீரம்மிகு மகனைப் பெற்றிட்டான்
மண்ணில் இவர் போல யாரென்று உலக மக்களைச் சொல்ல வைத்திட்டான்
மங்காத புகழோடு் மண்ணிலே நீ நீடு வாழி !
புன்னகை மாறாமல் உன்னவள் புவனேசுடன் பூமியில் நீடு வாழி !
களிப்போடு நீ என்றும் காசினியில் நீடு வாழி !
தங்கத் தமிழ் மொழி போல் தரணியிலே நீடு வாழி !
என்றும் அன்புடன்,
சபேசன் , சாருமதி ,ஓவியா, கவின், செழியன்


Kulasingam
Sinnathamby

Similar events