SRI LANKA
நயினை ஸ்ரீநாக பூசணிக்கு நாளை ஆடிப்பூரம் ஆரம்பம்

நயினை ஸ்ரீநாக பூசணிக்கு நாளை ஆடிப்பூரம் ஆரம்பம்

அம்பிகை அடியார்களே !

 

சுவர்ணபூமி எனப்போற்றப் பெற்றதும் நாயன்மார்களால் ,பாடல்பெற்ற திருத்தலங்களைக் கொண்டதுமாகிய இலங்காபுரியின் வடபால் சைவமும் ,தமிழும்,தர்மமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின் மேற்குத் திசையில் அலைகடல் மத்தியில் அமைந்த சப்த தீவுகளின் நடுநாயகமாக விளங்கும் நயினாதீவில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடம் எனப் போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாளுக்கு ஆடிப்பூரத் திருவிழாவை (பூரகர்மா) முன்னிட்டு நிகழும் பராபவ வருடம் ஆடித் திங்கள் 20ம் நாள் 05.08.2026 புதன்கிழமை நாளை ஆரம்பமாகி அம்பிகைக்கு

 

அபிஷேகங்களும் ,இலட்சார்ச்சனையும் ,

திருமுறைப் பாராயணமும்.தீபாராதனையும் இடம்பெற்று

ஆடித் திங்கள் 29ம் நாள் (14.08.2026) வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம் (ருதுசாந்தி விழா) இடம் பெறவுள்ளது

அம்பிகையின் அடியார்கள் அனைவரும் வருகை தந்து அம்பிகையின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.



Recent flyers