திரு ஆறுமுகம் தியாகராசா
Thiyagaraja
Arumugam
Born 1938-02-25 | Nainativu, Jaffna
Wife Nallamma Thiyagaraja
Children 3

ஆரம்பக் கல்வியினை நயினாதீவு கணேச வித்தியாசாலையிலும் இடைநிலைகல்வியினை நயினாதீவு மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்று சிரேஸ்ட தராதரப் பத்திரப் பரீட்சையை யா.முத்துத்தம்பி வித்தியாலயத்தில் (S.S.C) சித்தி பெற்றார்.

 

இவர்களின் தந்தை வழியினர் நயினை நாகபூசனி அம்மன் பரம்பரை அறங்காவலர்கள். அரசினால் நடாத்தப்பட்ட பொது எழுதுனர் தேர்வுப் பரீட்சையிலும் சித்தி பெற்று அரச சேவையில் 16/04/1959 ஆண்டு சேர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் சேவை செய்ததோடு சென்ற இடமெல்லாம் தன்னாலான பொதுத் தொண்டுகள் பல செய்ததுடன் ஆலயம் பாடசாலைகள் சாய் சமித்திகள் பஜனைக் கோஸ்டிகள் அறப்பணி நிலையங்கள் பலவற்றில் பல்வேறு பதவிகள் வகித்தார்.

 

சலம்பூவொடுதூபம் மறந்தறியேன் தமிழோடு இசைபாட ஒரு போதும் மறந்தவரில்லை இவர்.'நெக்குருகப் பாடும் பண்' அவளருளாலே இவருக்குக் கிடைத்தது. நாட்டில் ஏற்பட்ட அசாத்தியமான சூழ்நிலையின் போது தீவுப் பகுதி தெற்கு பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராக 22/12/1991 ல் கடமையேற்றார். நயினாதீவின் பல தேவைகளயும் தீவுப்பகுதி மக்களின் தேவைகளையும் கடற்படை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உணவுப் பொருட்கள் எரிபொருட்கள் தருவித்தும், க.பொ.த.(சா.த) க.பொ.த(உ.த) பொதுப்பரீட்சைகளை நடாத்தி வைத்தமையை மக்கள் எளிதில் மறந்து விட மடியாது.

 

நயினாதீவு நாகபுஷணி அம்மன் கோயில் தலைவராகவும் பல தடைவை பணியாற்றி இப்பொழுது தலைவராக பணியாற்றி மிகத் திறம்பட கும்பாபிசேகத்தினை நிறைவேற்றியுள்ளார். புத்தளம் முத்துமாரியம்மன் கோயில் அறங்காவலர் சபை செயலாளராகப் பணி செய்து அங்கு தமிழ் வித்தியாலயத்தினை உருவாக்கிய பெருமை இவருக்குரியதே. வவுனியா சிவன்கோவில் போசகராகவும் தொண்டு செய்கின்றார்.


Source: Pottamarai