புங்கை நகரில் பூத்த மலர் ஒன்று
நயினை நகர்த் தோட்டம் வந்து
நல்லான் ஓங்கார நாதன் மகளை மணந்து -தான் மலர்ந்த
நன்னாளாம் பிறந்தநாளைக் கொண்டாடிக் களிக்குது இன்று
விக்கினங்கள் எல்லாம் விரைவாகக் கழியட்டும்
வீணர்கள் உன்னை விட்டு வெகு விரைவில் பிரியட்டும்
வீட்டு விற்பனைகள் வெகுவாகக் கூடட்டும்
வித்தகனே உன் வாழ்வில் மகிழ்ச்சி என்றும் பெருகட்டும்
புங்கை நகர் மாரியம்மா புகழ் உனக்கு தந்திடவே
நயினை நகர் நாகம்மா நல்லருளைச் சுரந்திடவே - உனை
ஈன்ற தாய் முத்தம்மா இன்னும் அன்பைப் பொழிந்திடவே
ஈடில்லா இன்பம் பெற்று இப்புவியில் பல்லாண்டு வாழ்வாய்
Nayinai Nankai
CANADA