SRI LANKA

நயினாதீவு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரை இனிதே வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

29-06-2026 அன்று நடைபெற்ற பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.

 

தலைவர்: திரு தி.நிதர்சனன் அதிபர் (பதவி வழி)

செயலாளர்: திரு அ.சிறீராகவன் (பதில் நீதிவான், ஊர்காவல்துறை நீதிமன்றம்)

பொருளாளர்: திரு வீ. கணேசராசா (முந்நாள் அதிபர் யா/இந்துக் கல்லூரி) அவர்களும்

ஏனைய நிர்வாக உறுப்பினர்களும், உள்ளூர் மற்றும் வெளியூர் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.

 

இதுவரை இயங்கிய பழைய மாணவர் சங்கமானது பல்வேறு பணிகளை நிறைவேற்றி உள்ளனர். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி பாராட்டி இந்தப் புதிய பழைய மாணவர் சங்க நிர்வாகமானது தனது முதற் பணியாக பாடசாலைக்கான ஒரு நிலையான வைப்புத் தொகையைப் பழைய மாணவர் சங்க வங்கிக் கணக்கில் வைப்பிட்டு அதன் வட்டி வருமானத்தில் பாடசாலை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உத்தேசித்துள்ளோம்.

 

உதாரணமாக எமது பாடசாலைக்கான மின்சாரக் கட்டணம் மாதம் 9 ஆயிரம் ரூபாய் செலவாகும் ஆனால் அரசாங்கம் எமக்கு வழங்கும் தொகை 3000. மிகுதிப் பணம் 6 ஆயிரத்தினைச் செலுத்துவதற்கு நன்கொடையாளரை நாடவேண்டிய நிலை இதுவரை காணப்படுகிறது. இது போன்ற சிக்கலான சூழ்நிலையை எதிர் கொள்ளவும் பாடசாலைத் தேவைப் பாடுகளை (கல்வி, இணைப்பாட விதானச் செயற்பாடுகள் மற்றும் பௌதீக வளத் தேவைகள்) நிறைவேற்றுவதற்கும் பழைய மாணவர் சங்கத்தின் பலமான உதவி எமக்குத் தேவைப் படுகிறது.

 

சமகாலத்தில் அரசாங்கம் ,நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அமுத சுரபி அன்னதான சபையினர் ஆகியோரிடம் உதவிகளைப் பெற்று பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

 

இறுதியாக நடைபெற்ற பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பின் பிரகாரம் ஆயுள் உறுப்பினர் (5000/=) சாதாரண உறுப்பினர் (500/= / ஒரு வருடம்) செலுத்தி உறுப்பினர் சேர்த்துள்ளனர். அவ்வாறு சேர்ந்த 100000/= பணம் உடனடியாக எமது வங்கிக் கணக்கில் வைப்பிடப் பட்டது.

 

இதுவரை பழைய மாணவர் சங்கத்திற்கான வங்கிக் கணக்கு திறக்கப்படவில்லை இம்முறை புதிய நிர்வாக உறுப்பினர்கள் எமது வலயக் கல்வி அலுவலகத்தின் அனுமதியுடன் எமக்கான புதிய வங்கிக்கணக்கை இலங்கை வங்கியில் திறந்துள்ளோம். நீங்களும் எமது பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவராவதற்கான தொகையை எமது வங்கிக் கணக்கில் வைப்பிட்டு பழைய மாணவர் சங்க உறுப்பினர் ஆகுங்கள். அத்துடன் எமது நிலையான வைப்புத் தொகை ஆரம்ப இலக்கு 5000000/= ஐம்பது இலட்சம் என்ற இலக்கை அடைய தங்கள் மேலான பங்களிப்பை நேரடியாக எமது பாடசாலைப் பழைய மாணவர் சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிட்டுத் தங்கள் பற்றுச்சீட்டை (பொருளாளர் இடமிருந்து) பெற்றுக் கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். சகல வங்கிக் கணக்கு விபரங்கள் செலவு விபரங்கள் தங்களுக்கு உடனுக்குடன் அறியத் தரப்படும்.

 

மேலதிக தொடர்புகளுக்கு

தலைவர்: திரு தி.நிதர்சனன் - 0776053925

செயலாளர்: திரு அ.சிறீராகவன் - 778-009-959

பொருளாளர்: திரு வீ.கணேசராசா - 077 884 9677

 

எமது இலங்கை வங்கிக் கணக்கு இலக்கம் - 96714708

நிர்வாக உறுப்பினர்கள்,

பழைய மாணவர் சங்கம்,

யா/நயினாதீவு மகா வித்தியாலயம்


Recent news