UNITED KINGDOM

நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – MEET AND GREET 2026

நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா சார்பில், நேற்று Ilford பகுதியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி “MEET AND GREET” நிகழ்வில் உற்சாகத்துடனும், ஒற்றுமை உணர்வுடனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்த அனைத்து இளைஞர்கள், யுவதிகள், பெற்றோர்கள் மற்றும் உறவுகளுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மூன்று பகுதிகளிலும் நடைபெற்ற “MEET AND GREET” நிகழ்வுகள், எமது சமூக இளையோரை ஒரே குடும்பமாக இணைக்கும் உயரிய நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்றைய சந்திப்பில் உருவான புதிய நட்புகள், புதுப்பிக்கப்பட்ட உறவுகள், பகிரப்பட்ட புன்னகைகள் மற்றும் இனிய நினைவுகள், நமது சமூகத்தின் எதிர்கால ஒற்றுமைக்கான வலுவான அடித்தளமாக அமையும்.

குறிப்பாக, தங்கள் நேரத்தை ஒதுக்கி ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்கள், யுவதிகள் மற்றும் அவர்களை ஊக்குவித்து அழைத்து வந்த பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

அத்துடன், இந்த மூன்று “MEET AND GREET” நிகழ்வுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க அயராது உழைத்த எமது நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் மறைமுகமாக ஆதரவளித்த அனைத்து நலன்விரும்பிகளுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று விதைக்கப்பட்ட இந்த ஒற்றுமை விதைகள், நாளைய வலிமையான சமூகமாக மலரும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்குண்டு.

இப்போது, அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் Sports Day 2026 விழாவில் மீண்டும் ஒன்றிணைந்து, நமது ஒற்றுமையையும் உற்சாகத்தையும் இன்னும் சிறப்பாக வெளிப்படுத்துவோம்.

ஒன்றிணைவோம்…

உறவுகளை வலுப்படுத்துவோம்…

இளையோரை இணைப்போம்…

Sports Day 2026-இல் அனைவரும் மீண்டும் சந்திப்போம்!

அன்புடன்,

நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,

ஒற்றுமையே நமது பலம்!”


United Kingdom 1995 +20 8542 1805
nainativumwa@gmail.com
Website

Recent news