நல்லதம்பி நாகமுத்துப் பெற்ற நல்லமகன்
வல்ல யோகேஸ்வரிக்கு வாய்த்த நல் மணாளன்
சொல்வவல்ல நற்பண்பின் சொந்தக்காரன்
எல்லாம் வல்ல இறைவியருள் பெற்று நீடு வாழி
பாதம் போகும் இடமெல்லாம் சென்று
பேதம் பாராது பெரும் சேவை புரிபவனே
வேதம் நான்கின் மெய்ப் பொருளை உணர்ந்தவனே
சாதம் வழங்கும் அன்னதான சபை உறுப்பினனே
மாதம் பன்னிரண்டும் மக்கட்பணி செய்பவனே
நாதத்தின் தலைவன் நல்லருளுடன் நீடு வாழி
காலை மாலை என்னாது கல்விச் செல்வம் தன்னை
மாலைதீவு வரை சென்று மாணாக்கருக்கு அளித்தீர்
வேலையது சேவையெனச் சேவையது வேலையெனச் செய்துலகில்
நிலையாக மக்கள் மனங்களில் நிலைப்பவனே நீடு வாழி
SRI LANKA