நல்லதம்பிநாகமுத்துப் பெற்றஒற்றைமகள்
நாடுபோற்றும் நன்மக்களைப்பெற்றமகள்
தணியாததமிழ் மோகம்கொண்டமகள்
தரணியிலேகண்டாள் எழுபத்து மூன்று இன்று
படிபடியென்ற உன் சொல்கேட்டு
படிப்படியாய் வாழ்வில் பலர்உயந்தார்
நொடியேனும் ஓயாமல் பணிசெய்யும் - உன்
துடிப்புக் கண்டுபலர் வியந்துநின்றார்
நித்தமும் நீபேணும் சுத்தத்தில் - இந்த
நித்திலமேமதிமயங்தும்
நாமகள் பெயரைக் கொண்டவளே
நல் விருந்தோம்பலில் சிறந்தவளே
நல்லவன்கோபாலனைநாயகனாய்க் கண்டவளே
நானிலத்தில் நலமோடுநீடூழிநீவாழி
நயினைநங்கை
CANADA