பிறந்தநாள் வாழ்த்துப்பா
குட்டித்தம்பி குலசிங்கம்
குதூகலமாய் கொண்டாடும்
எட்டிப்பிடித்த ஆண்டு
எழுவதனை ஏந்திளையாள் புவநேசை
கட்டிப்பெற்ற பிள்ளை
பேரருடன் களிப்பாய் மேலும்
பல்லாண்டு
மட்டிலாத மகிழ்ச்சியுடன் வாழ
மணியும் வாழ்த்துகிறேன்
- Gopalasundaram
எல்லாம் வல்லவனை எல்லோர்க்கும் நல்லவனை
எம்மண் பெற்றிடவே என்னதவம் செய்ததென்று
எண்ணிப்பெருமிதத்தை எல்லவரும் கொள்ளும்வேளை
எட்டினான் ஏழுபத்தை சின்னத்தம்பியின் குட்டிக்காளை
சிங்கத்தை ஒத்த நடை சிந்திக்க வைக்கும் விடை
தங்கத்தை நிகர்த்த குணம் தலைக்கனம் இல்லாப் பணம்
வங்கத்தை தாண்டி ஓடும் வரையறையில்லா அன்பு
பங்கத்தைப் பல்லிக்கும் நினையா நெல்லியாச்சி மகனுக்கு எழுபதாச்சா ?
எல்லவரும் மயங்கும் ஈடில்லா உன் எழிலில்
ஏந்திழையாள் புவனேசு வீழ்ந்ததிலே வியப்பில்லை
இரத்தினத்தின் மகளோடு இந்நித்திலத்தில் இனிதே வாழ
இத்தினத்தில் இறைஞ்சுகிறோம் இறைவி நாகபூசணியை
எழுபதை அடைந்தார் என்பதை நம்ப முடியவில்லை
எள்ளளவும் முதுமை உம்மில் தெரியவில்லை
இளமைத் துடிப்போடு என்றும் இன்பக் களிப்போடு
பழமை மிக்க தமிழ் மொழி போல் பாரில் நீடு வாழியவே
- Nayinai Nankai
AUSTRALIA