குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பம்!

குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பம்!

இன்றைய தினம் (22.04.2026) காலை 09.00 மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்கா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

 

கடந்த ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி குறிகட்டுவான் இறங்குதுறைக்கு முன்னரான நடைபாதையுடன் கூடிய வீதிப் புனரமைப்பு 299.80 மில்லியன் ரூபாவில் - பெருந் திட்டத்திற்கமைய (Master Plan) அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக குறித்த இறங்குதுறை புதிய தோற்றத்துடன் நீண்ட காலத்திற்கு பின் 984 மில்லியன் ரூபா செலவில் இரண்டாம் கட்டமாக நிர்மானிக்கப்படவுள்ளது.

 

குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நிகழ்வின் முடிவில் கெளரவ அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முதலாம் கட்ட புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆராய்ந்தனர்.

 

இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், அவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, அவர்கள் ,கெளரவ கருணநாதன் இளங்குமரன், அவர்கள்,கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், அவர்கள்,வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், அவர்கள்,யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும்யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், அவர்கள்,நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதி, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். சிறப்பித்தனர.

Recent news