நயினாதீவில் படகு விபத்து - பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி மரணம்!

நயினாதீவில் இருந்து குறிகட்டுவானுக்கு சிறிய மீன்பிடி படகில் பயணிக்கும் போது தவறிவீழ்ந்து மரணம்.

 

தனியார் படகு மூலம் நயினாதீவில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி செல்லும் போது படகு கவிழ்ந்ததில் நயினாதீவு 06 வட்டாரத்தை சேர்ந்தவரும் நயினாதீவு சிறிகணேசா வித்தியால அதிபருமாகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான நடராசா மயூரன் வயது - 48 என்பவர் நீரில் மூழ்கி இன்று (28) மாலை மரணம் அடைந்துள்ளார்.

 

குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு சிறிகணேச வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றுமை குறிப்பிடத்தக்கது.

 

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தற்போது நைனாதிவு பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent news