பிரான்க்போட் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்

Schlitzer Str. 4, 60386 Frankfurt am Main, Germany 2000
Frankfurt Sri Nagapooshani Amman Temple
+49 69 97945618
info@ammankovil.de
Website

உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எமது சமுதாய மக்கள் நலன் கருதி இந்து கலை, கலாச்சார, சமய சம்பிரதாய விழுமியங்களை பேணிக்காக்கும் வகையிலும் இறைநம்பிக்கை, வழிபாட்டுடன் ஆன்மீக நுன்அறிவினை பெற்று வாழ்வில் அனைத்து இந்துமக்களும் சிறந்து விழங்குவதற்காகவும் பொது நலனாக கருதி ஜேர்மனி பிராங்பேர்ட் நகரில் கடந்த 2000 ஆண்டின் “இந்துமன்ற“ தலைவராக விளங்கிய திரு . சு. மகேந்திரனின் நிருவாகத்தினாலும் அம்பிகை அடியவர்களின் பூரண ஒத்துழைப்புடனும், ஆலயகுருக்களாக சிவஶ்ரீ. ஸோம. துளஸிகாந்தக்குருக்களை அமர்த்தி ஆரம்பிக்கப்பட்ட “அன்னை ஶ்ரீ நாகபூசணி அம்பிகை தாயின் ஆலயத்தை “ பரிபாலிக்கும் பாக்கியம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனும் போது நாமும் எம்பெருமாட்டியின் கருனைக்கு ஆளாகியுள்ளோம் என எண்ணி அகமகழ்கின்றோம்; அது எமது மகிழ்ச்சியின் உச்சகட்டமே எனலாம். அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் எம்முடன் சேர்ந்து ஒத்துளைப்பினை நல்கிவரும் ஆலய நிருவாகத்தினருக்கும், குருக்கள் ஐயா அவர்கட்கும், ஆலயவளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கும் மாதாந்த சந்தா தாரராக அங்கத்தவர் பணம் கட்டுபவர்களுக்கும் பல விஷேட தினங்களையும், பண்டிகைகளையும் மற்றும் விழாக்காலங்களையும் பொறுப்பேற்று முன்னின்று ஒத்துழைப்பு நல்கும் உபயதாரர்களுக்கும் அனைத்து அடியவர்களுக்கும் குறிப்பாக தொண்டாற்றிவருபவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதுடன் அன்னை ஶ்ரீ நாகபூசணி தாயின் அருள் கிடைக்க பிரார்தித்து அமைகின்றோம். சுபமங்களம்


Source: Social Media