வரலாற்றுச் சிறப்பும், ஆன்மீகப் பொலிவும் பெற்று அறுபத்திநான்கு சக்திபீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி சக்திபீடத்தைத் தன்னகத்தே கொண்டு மணிபல்லவம் என்னும் நயினாதீவில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளை உயர் திருவிழாக்களின் போது உள்ளன்போடு நெக்குருக்கி அம்பாளின் அருளாசிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் உள்நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அம்பாளைத் தரிசிக்கவரும் பல்லாயிரக்கணக்கான அடியார்களின் பசிப்பிணியைப் போக்குவதற்கு உணவுச்சாலைகளோ, சிற்றுண்டிச்சாலைகளோ சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் போதியளவு இருக்கவில்லை. ஆங்காங்கே சில உணவுச்சாலைகள் இருந்தாலும் பணத்தைக் கொடுத்தும் பசிதீரும் அளவிற்கு அடியார்கள் திருப்திப்படக் கூடியளவில் அவை இருக்கவில்லை. பணத்தைக் கொடுத்துவிட்டு பசி தீராமல் வருந்திக்கொண்டு போவதைக் கண்டு மனம் வெதும்பிய நயினாதீவிலுள்ள அன்புள்ளம் கொண்ட புத்திஜீவிகளும், வர்த்தகர்களும் ஒன்று கூடி, அடியார்களின் பசிப்பிணியைப் போக்குவதற்கு உடனடியாத் திடசங்கற்பம் கொண்டவர்களாக இருந்ததன் விளைவாக, அவர்கள் சிந்தனையில் கருவாகக் 1960ம ஆணடில நயினாதவு ஸ்ரீ நாகபூசணி அமம்ன யாதத்த்கீரக் ளின் அனன்ன் தானசபை' எனற் பெயருடன ஓர வரையறுகக்ப் டட் சபையை உருவாகக் அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்திலிருந்து தெற்குப் பக்கமாக சுமார் 300 மீற்றர் தொலைவில் ஒரு தற்காலிக ஓலைக் கொட்டகையை அமைத்து, தருமசீலர்களினால் உவந்தளிக்கப்பட்ட பொருட்களின் உதவியைக் கொண்டு அதே ஆண்டு உயர் திருவிழா தொடக்கம் அடியார்களுக்கான அன்னதானத்தைத் தொடர்ந்து வழங்கி பசிப்பிணியைப் போக்கி வந்தனர்.
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அமுதசுரபி அன்னதானசபை
Nainativu, Jaffna
Nainativu Sri Nagapoosani Amuthasurapi Annathana Sabai
Source:
Amuthasurabi