SRI LANKA

கனேடிய அரசு நிதியுதவி வழங்கும்

நயினாதீவு சமூக, பொருளாதார, கல்வி, கலாசார அபிவிருத்திச் சங்கத்தின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் மேற்படி சங்கத்தின் தலைவரும், வட- கிழக்கு மாகாண காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ப.க.பரமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தலமையுரையை ஆற்றிய ப.க.பரமலிங்கம் நயினாதீவில் நன்னீர் கிணறுகள், மலசல கூடங்கள் அமைப்பதற்கு கனேடிய அரசாங்கதின் சீடா(CIDA) நிறுவனத்தினால் எமது சங்கத்திற்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், இவ்வாண்டிற்கான சங்கத்தின் செயற்திட்டதில் 2 மில்லியன் ரூபா செலவில் நயினாதீவின் பிரதான வீதி ஆலங்குளம்வீதி 1 ஆம், 2 ஆம், 3 ஆம் குறுக்குத் தெருக்களுக்கு மின்னிணைப்புகளுடன் தெருவிளக்குகள் அமைத்து மாலை 7.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணிவரை மின்சாரம் வழங்குவதற்கும் இச் செயற்றிட்டதை எதிர்வரும் ஜூன் மாதம் நடை பெறவிருக்கும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் திருவிழாவுக்கு முன்பாக நடைமுறைபாடுதுவதற்கு ஏதுவாக பொறியியலாளர் நல்லையா செல்வநாதன் தலைமையில் மூவரடங்கிய ஓர் குழு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான நிதி நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர், எமது நீண்ட கால வேண்டுகோளுக்கு இணங்க பிரதான வீதி, 1 ஆம், 2 ஆம் குறுக்குதெருக்களைச் செப்பனிடுவதற்கு 4 மில்லியன் ரூபாய்கள் சம்பந்தபட்ட அரச திணைக்களங்களினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நயினாதீவை வளமிக்க, செழிப்புமிக்க கிராமமாக மாற்றுவதற்கு எமது சங்கம் திடகாத்திரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் எடுத்து வருமெனவும் அதற்கு நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்தழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Recent news