சுவிஸ் ஒன்றிய தலைவர் நயினை பாடசாலைகளுக்கு விஜயம்

நயினாதீவு மக்களின் நிலமைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை தக்க சமயத்தில் வழங்கி நயினாதீவு மக்களின் நன் மதிப்பை பெற்றிருக்கும் நயினாதீவு அபிவிருத்தி கழகம் [சுவிற்சர்லாந்து ] கழகத்தின் தலைவர் மதிப்புக்குரிய சாமியாபிள்ளை தர்மராஜா அவர்கள் இன்று தனது சொந்த இடமான நயினாதீவுக்கு வருகை தந்திருந்தார். இதன்போது நயினாதீவின் மூன்று பாடசாலைகளுக்கும் விஜயம் சென்று அங்கு தேவையான அபிவிருத்தி வேலைகள் பற்றி கலந்துரையாடி பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அவர்களால் வைத்த கோரிக்கைகளை ஒன்றிய கூட்டத்தில் கலந்துரையாடி நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தார் இவருடன் நயினாதீவின் சுவிஸ் ஒன்றிய அமைப்பாளர் திருவாளர் முத்தையா மகாலிங்கம் அவர்களும் பிரசன்னமாகியிருந்தார் இதன்போது நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும் மற்றும் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு ஊக்கிவிப்பு தொகையாக 5000 ரூபா வழங்கப்படுவதையும், இதன் போது அங்கு வருகை தந்த புலம் பெயர் வித்தியாலய பழைய மாணவ சகோதரர்கள் அம் மாணவனுக்கு தங்களின் ஊக்குவிப்பு நன்கொடையும் வழங்குவதையும் தொடர்ந்து நயினாதீவு நாகபூசணி வித்தியாலயத்திற்கு சென்று அங்குள்ள அபிவிருத்தி திட்டங்களை கேட்டறிந்து அங்கிருந்து நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு சென்று அங்குள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார் இதன் போது அவர்களால் வைத்த கோரிக்கையில் மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியில் 2 ம் இடம் பெற்ற மாணவி ஒருவர் மாகாண மட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்வதற்கு வறுமை காரணமாக உள்ளதால் அவரின் பயண ஒழுங்குகளுக்காக ரூபா 10 000 வழங்கப்பட்டது அவர்களுக்கு அங்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது இன் நிகழ்வுகளின் பதிவுகளை இங்கே பகிர்கின்றேன்

Recent news