நயினாதீவு பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

நயினாதீவு பிரதேச வைத்திய சாலைக்கு மக்களால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது நயினாதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் கார்த்திகேசு கமலாம்பிகை அவர்களின் ஞாபகார்த்தமாக, அவர்களின் குடும்பத்தினரால் உருளி நாற்காலி (wheel chair) ஒன்று அவர்களின் பிள்ளைகளால் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. அமரர்களான நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த கிருஸ்ணசாமி செல்வராணி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு இரத்த அழுத்த செயற்பாட்டுக் கருவி (pressure box) ஒன்று அவர்களின் புதல்வர் கிருஸ்ணசாமி குமரேசன் (இத்தாலி) அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை கண்டறிந்து இப்படியான சேவைகளை வழங்குபவர்களையும் ஊரையும் உறவையும் நேசிப்பவர்களையும் பாராட்டுகின்றோம்.

Recent news