நயினாதீவு தம்பகைப்பதிப் பெரிய கோவில் ஶ்ரீபத்திரகாளிஅம்பாள் சமேத ஶ்ரீவீரபத்திரர் கோவிலின் நூதன இராஜகோபுரசங்குஸ்தாபன அடிக்கல் நாட்டுவிழா பற்றிய அறிவித்தல்!!!
நாகங்களும் நாதங்களும் காவல்காக்கும் புனிதத் தீவு நயினாதீவு. நாகபூஷணி அம்மன் அருளும், வீரபத்திரர் வீரமும் தங்கிய திருநிலம். அந்த தெய்வ மண் வாசனையில் ஒரு புதிய பக்தி வரலாறு எழுதப்படப் போகின்றது.
"தம்பகைப்பதிப் பெரிய கோவில்" என வழங்கும், ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரர் புதிய ஆலயத்தின் மகத்தான இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் திருநிகழ்வு பெருப் பக்திப் பரவசத்தோடு நடைபெறவுள்ளது.
கடல் கடந்தும் நினைவில் நயினாதீவினை கொண்டாடும் கனடா வாழ் தம்பகைப்பதியான் அடியவர்களின் அன்பும் அர்ப்பணிப்பும், பிரித்தானியா வாழ் , பிரான்ஸ் வாழ் தம்பகைப்பதியான் அடியவர்களின் அன்பும் அர்ப்பணிப்பும் இணைந்து அருளின் ஆலயமாக எழும் இந்தப் புண்ணிய நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 02 ம் திகதி 16/03/2026 திங்கள் கிழமை காலை 7:00 மணிக்கு புனித நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் மங்கள பூஜைகளுடன் ஆரம்பமாகி பக்தி முழக்கங்களுடன் அடிக்கற்கள் நடைபவனியாக, ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரர் ஆலயத்திற்கு வீதிவலமாக எடுத்துவரப்பட்டு அங்கும் பூஜைகள் நடைபெற்று பக்தி முழக்கத்துடன் அடிக்கல் நாட்டப்படும் என்பதை அனைத்து தம்பகைப்பதியான் அடியவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அனைத்து தம்பகைப்பதியான் அடியவர்களும், தம்பகைப்பதியானின் மகாசபை உறுப்பினர்களும், நயினாதீவு உறவுகளும், பக்தர்களும், புலம் பெயர் தேசத்திலிருந்து நயினாதீவிற்கு வருகைதந்திருக்கும் உறவுகளும் குடும்பத்தாருடன் வருகை தந்து பூஜைகளில் கலந்து கொண்டு தம்பகைப்பதியானின் அருளைப் பெற்றிடவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் அன்னதானத்திலும் கலந்து கொண்டு அன்னம் பகிர்ந்து, அன்பை வளர்த்து, அருளைப் பெருக்குமாறும் மிகுந்த பக்தியுடன் அழைக்கப்படுகிறீர்கள்.
வாருங்கள்....
ஶ்ரீ பத்திரிகாளி அம்பாள் சமேத வீரபத்திரர் நாமம் முழங்கட்டும்...
ஶ்ரீ பத்திரிகாளி அம்பாள் சமேத வீரபத்திரர் அருள் பொழியட்டும்...
நயினாதீவின் பக்தி ஒலி உலகம் எங்கும் கேட்கட்டும்...
அன்பே சிவம்!! ஓம் சக்தி!!
அனைவரையும் அழைப்பது,
கனடா வாழ் நயினாதீவு தம்பகைப்பதியான் அடியவர்கள், மற்றும்
நயினாதீவு ஶ்ரீ பத்திரிகாளி அம்பாள் சமேத வீரபத்திரர் கோவில் நிர்வாகத்தினர்கள்.